வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் இனி சமரசம் செய்யும் வாய்ப்பில்லை என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் சிர்ங்ளா.
அமெரிக்கா பழைய கொள்கையின் அடிப்படையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமரசம் செய்வது இல்லை எனக் கூறியுள்ளதாக ஹர்ஷ் வர்தன் நேற்று முன்தினம் சொன்னார்.
இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார்.
ஆனால், இந்தியா அதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இனி சமரசப் பேச்சில் ஈடுபட போவதில்லை என்று அவர் சொன்னதாக ஹர்ஷ் வர்தன் பாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில் ஹர்ஷ் வர்தன் கூறி
னார்.
கடந்த 22ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய முன்வருவதைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், தான் அவ்வாறு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அனைத்துப் பிரச்சினைகளும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாகத் தீர்க்கப்படவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

