சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி இந்தியத் தலைநகர் டெல்லி உட்பட இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி உரையாற்றவுள்ள டெல்லி செங்கோட்டையில் பல நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்