கேரளாவில் நோய்கள் பரவும் அபாயம்

கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இயற்கையின் சீற்றத்தால் மக்கள் அவதியுற்றுவரும் நிலையில் இரண்டு நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. அதே வேளையில் கேரளாவின் மூன்று மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் அங்கு அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், தற்போது நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹெச்1என்1 கிருமி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்திவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நோய்த் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.