அபிநந்தனுக்கு நாளை உயரிய தேசிய விருது

அபிநந்தனுக்கு நாளை உயரிய தேசிய விருது

1 mins read
eea904fc-e44e-4db1-abad-85c5a3743703
-

டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் இந்திய ஆகாயப்படை வீரர் 'விங் கமாண்டர்' அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஆகாயப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் மூன்றாவது உயரிய விருதான வீர்சக்ரா விருது வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆகாயப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

டெல்லியில் நாளை நடக்கும் நாட்டின் 73வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருதும், பாலகோட் தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய இந்திய ஆகாயப்படை குழுத் தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளன.