டெல்லி அருகே ஃபரிதாபாத் மாவட்டத் துணை போலிஸ் ஆணையர் தற்கொலை

டெல்லி அருகே ஃபரிதாபாத் மாவட்டத் துணை போலிஸ் ஆணையர் தற்கொலை

1 mins read
5311d494-329f-4ea0-9656-8a3a86ef12fa
ஃபரிதாபாத் மாவட்டத்தின் துணை போலிஸ் ஆணையர் விக்ரம் கபூர் -

ஃபரிதாபாத் மாவட்டத்தின் துணை போலிஸ் ஆணையர் விக்ரம் கபூர் தமது வீட்டில் அதிகாரபூர்வ போலிஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துணை ஆணையரின் தற்கொலை வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார் ஃபரிதாபாத் போலிஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சுபே சிங்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் உள்ள புதிய தொழில்துறை நகரத்தின் பொறுப்பாளராக விக்ரம் கபூர் இருந்தார்.