7 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தாய்

7 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தாய்

1 mins read

வாரங்கல்: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில், ஜெனகாமா மாவட்டம் பெம்பர்த்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிறந்து 7 மாதமே ஆன பெண் குழந்தையுடன் வாரங்கல் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.

அங்கு அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் போலிசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு, குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பசியால் துடித்த குழந்தைக்கு அவர்கள் பால் வழங்கி பராமரித்தனர்.

விசாரணையில், கணவன் மனைவி சண்டையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறியதாகவும் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் வாரங்கல் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

குழந்தையை மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்த போலிசார், விற்க முயன்றது தொடர்பாக வழக்கு பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.