திங்கட்கிழமை முதல் ஜம்மு -காஷ்மீரில் கல்வி நிலையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு- காஷ்மீரில் 19ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆணையை அடுத்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகமும் மற்ற அரசு அலுவலகங்களும் நேற்று முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.  

இம்மாதம் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, 370 சட்டப் பிரிவின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அத்துடன், அம்மாநிலமும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு -காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது; இணையச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன; ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அதிரடி அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் குரல்கள் கிளம்பின.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதுடெல்லியில் உள்ள
லோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ

09 Dec 2019

தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து