மோடி உரைக்கு சிதம்பரம் வரவேற்பு

மோடி உரைக்கு சிதம்பரம் வரவேற்பு

1 mins read

சென்னை: சுதந்திர நாள் உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு, செல்வந்தர்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

"சுதந்திர நாள் உரையின் போது திரு மோடி முன்வைத்த மூன்று விஷயங்களை நாம் வரவேற்க வேண்டும். அவர் சொன்னதுபோல, சிறிய குடும்பமாக இருப்பதே நாட்டுப் பற்றுதான். அதேபோல, ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்விரு அறிவிப்புகளும் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை.

செல்வந்தர்களை மதிக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்பை நிதியமைச்சரும் அவருக்குக்கீழ் பணிபுரியும் வருமான வரித்துறையினரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திரு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.