சந்திரபாபு நாயுடு உட்பட 38 பேர் வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அவர் குடும்பத்துடன் தங்கியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஆந்திர மாநில அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணையில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் (படம்)தரைத்தளத்திற்குள் புகுந்துள்ளது. இதனிடையே திரு சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெள்ளம் வரும் முன்பே இரவோடு இரவாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். 

ஏற்கெனவே சந்திரபாபு நாயுடு வீட்டின் மேலே டிரோன் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என தெலுங்குதேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். 

இந்த புதிய உத்தரவும், பழிவாங்கும் நடவடிக்கையே என சந்திரபாபு நாயுடுவின் மகன் குற்றம் சாட்டிஉள்ளார்.

Loading...
Load next