இந்தூர்: கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட முதியவர்கள் 11 பேருக்குப் பார்வை பறிபோனது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் அந்த முதியவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி இம்மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் லோகேஷ், எதனால் பார்வை பறிபோனது என்பது தெரியவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் 11 முதியவர்களின் பார்வை பறிபோனது
1 mins read
-

