காஷ்மீர் விவகாரம்: அரசு திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரம்: அரசு திட்டவட்டம்

1 mins read

ஹரியானா: இனி காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை என்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவைப் பிரிக்க பாகிஸ்தான் முயல்வதாகக் குற்றம் சாட்டினார். 65 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடி இந்தியா எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்துக்கு உதவுவது, ஊக்குவிப்பது ஆகியவற்றை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.