நோயாளிகளைச் சித்ரவதை செய்த மூவருக்குச் சிறை

நோயாளிகளைச் சித்ரவதை செய்த மூவருக்குச் சிறை

1 mins read

மும்பை: தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி நோயாளிகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்த மூவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மூவரும் சகோதரர்கள் ஆவர். 52 வயதான புருஷோத்தம், நந்தகுமார் (58 வயது), உமேஷ் (48 வயது) ஆகிய மூவரும் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் போதை மீட்பு மறுவாழ்வு மையம் நடத்தி வந்தனர்.

இம்மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பெறும் நோயாளிகளைத் தீய சக்திகள் பீடித்துள்ளதாகக் கூறி கடுமையாக அடித்துச் சித்ரவதை செய்ததாகப் புகார் எழுந்தது. இவர்களின் சித்ரவதையை எதிர்த்த நோயாளிகளை மிரட்டியும் உள்ளனர்.

இந்நிலையில் நோயாளிகளின் குடும்பத்தாருக்கு இதுகுறித்து விவரங்கள் தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு மூன்று சகோதரர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் மூவரும் மறுவாழ்வு மையம் நடத்தி வந்ததும், சிகிச்சை என்ற பெயரில் கட்டணம் வசூலித்து ஏமாற்றியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக நடந்து வந்த வழக்கின் முடிவில் மூவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.