முகேஷ் அம்பானி சொத்து இரு நாளில் ரூ.29,000 கோடி உயர்வு

முகேஷ் அம்பானி சொத்து இரு நாளில் ரூ.29,000 கோடி உயர்வு

1 mins read
67cdb260-fe38-44a8-9804-9678e8d99490
-

மும்பை: ஆசியாவின் கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு நாட்களில் ரூ.29,000 கோடி (4 பில்லியன் டாலர்) உயர்ந்ததை அடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ரசாயனப் பொருட்களில் 20% சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான முடிவு, அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஜியோ ஃபைபர் திட்டம் அறிமுகம் ஆகியவை காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% அதிகரித்ததே சொத்து மதிப்பு கூடியதற்குக் காரணங்கள்.

முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 49.9 பில்லியன் டாலர்.