வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் நால்வரை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தாவி நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் அங்கிருந்த மீனவர்கள் நால்வர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள்  இருவரும் ஆற்றின் குறுக்கே இருந்த திட்டின் மீது ஏறி உயிர் தப்பினர். இதைக் கண்ட அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வீரர் ஒருவரை இறக்கி், அவர்கள் உடலில் ஹெலிகாப்டரோடு இணைக்கப்பட்டிருந்த கயிறுகளைக் கட்டி இரு மீனவர்களையும்  பாதுகாப்பாக மீட்டனர். விமானப்படை வீரர்களின் துரித நடவடிக்கையால் மீனவர்கள் நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஜம்மு பகுதிக்கான விமானப்படை அதிகாரி  சந்தீப் சிங்  தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்
 

Loading...
Load next