(காணொளி): புகைப்படம் எடுத்தவரைத் தாக்கிய சிறுத்தை

மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு சிறுத்தை, தன்னைப் புகைப்படம் எடுத்தவரைத் தாக்கியுள்ளது.  அந்தச் சிறுத்தை, தெரியாத சில காரணங்களால் காயமடைந்த நிலையில் சாலையோரத்தில் படுத்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஒருவர் அதற்கு மிக அருகில் சென்று புகைப்படம் எடுத்தார். சிறுத்தைக்கு அருகே கூட்டம் ஒன்று நின்றுகொண்டிருந்தபோதும் அவர்கள் சற்றுத் தள்ளியே இருந்தனர்.

அதுவரையில் படுத்துக் கிடந்த சிறுத்தை திடீரென எழுந்து படம் எடுத்தவரைத் தாக்க ஆரம்பித்தது.  தாக்கப்பட்ட ஆடவர் இலேசான காயங்களுடன் தப்பியோடியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

 

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.