கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்

கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்

1 mins read
1992a7a3-44ab-4b58-847e-0dd9328654f5
ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே  ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  படம்: ஊடகம் -

ஒடிசா: ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில் உள்ளது நெஹலா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு முறையான சாலை வசதிகள் எதுவும் இல்லை.

அவர்கள் ஆம்புலன்ஸ் வசதியைப் பெற தங்களது கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கனிகுமா கிராம் நகரை வந்தடைய வேண்டும்.

இதனால் அவரது உறவினர்கள் கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்தபடி 12 கி.மீ.் தொலைவைக் கடந்து கனிகுமா கிராம் நகரை வந்தடைந்தனர்.

வழியில் குறுக்கிட்ட ஜெலிங்கதோரா ஆற்றையும் கடந்த அவர்கள், கனிகுமாவில் கர்ப்பிணியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். படம்: ஊடகம்