முதலில் தேநீர் தயாரிப்பு; இப்போது கவிதை எழுதி அசத்திய மம்தா

முதலில் தேநீர் தயாரிப்பு; இப்போது கவிதை எழுதி அசத்திய மம்தா

1 mins read
cd2dcd47-c98b-4d0d-a3ee-13341e28ca9b
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி -

கொல்கத்தா: சாலையோரத் தேநீர் கடையில் திடீரென நுழைந்து தேநீர் தயாரித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னர் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொஞ்சியது கடந்த வாரம் அம்மாநில மக்களிடையே வெகுவாக ரசித்துப் பேசப்பட்டது.

இந்நிலையில் கவிதையும் எழுதியுள்ளார் முதல்வர் மம்தா. வங்க மொழியில் எழுதியுள்ள அந்தக் கவிதையில் ஜனநாயகம் கண்ணீர் விடுவதாகவும், நீதி அமைதியாகக் கண்ணீர் விடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட முறையை விமர்சிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.