ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் தர மறுப்பு

ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் தர மறுப்பு

1 mins read

புதுடெல்லி: நிலுவைத் தொகை அதிகரித்ததால் ஏர் இந்தியா விமானங்களுக்கு எண்ணெய் வழங்க 6 எண்ணெய் நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை இரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது. கொச்சி, விசாகப்பட்டினம், மொகாலி, ராஞ்சி, பூனே, பாட்னா உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்கஙளுக்கு எண்ணெய் நிரப்பப்பட மாட்டாது என எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.