ஜம்மு கா‌ஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, சீத்தாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, குபேந்திர ரெட்டி, ஆனந்த் சர்மா, சரத் யாதவ், மனோஜ் ஜா ஆகியோர் இடம்பெறுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து நேரடியாக காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல உள்ளனர். அங்கிருந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த எதிர்க்கட்சி பிரதி நிதிகள் பயணம் செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஜம்மு காஷ்மீரின் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல அனுமதி இல்லாததன் காரண­மாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.