ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதை பெறுகிறார் நரேந்திர மோடி

புதுடெல்லி: காஷ்மீரின் சிறப்புத் தகுதி மீட்டுக் கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே உலகின் பெரிய முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துலக நாடுகளின் ஆதரவைப்பெற முயற்சி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காஷ்மீருக்கு 

70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது.