அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை எனக் கூறி புதுவை அதிமுக வெளிநடப்பு

அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை எனக் கூறி புதுவை அதிமுக வெளிநடப்பு

1 mins read

புதுவை: புதுவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என அம்மாநில அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.

இதையடுத்து நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நேற்று காலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் துவங்கியது.

அவர் தனது உரையைத் தொடங்கியதுமே, அதிமுக உறுப்பினர்கள் அரசு மீது குற்றம்சாட்டி குரல் எழுப்பினர். பின்னர் ஆளுநர் உரையைப் புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு துணைநிலை ஆளுநர் மீது குறை கூறி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனச் சாடினார்.

மூன்று ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்துதான் வெளிநடப்புச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.