கொச்சி: கேரளாவின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து ஐந்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் போதுமான அளவு மழைப் பொழிவு இல்லை.
எனினும் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து பருவமழை மெல்ல தீவிரமடைந்து தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த நிலையில் இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் இரு தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையின்போது பலத்த காற்று வீசும் என்றும், பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களிலும் மீட்புப்படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை காரணமாக கடலில் சீற்றமும், சூறைக்காற்றும் இருக்கும் என்றும், மீனவர்கள் இரு தினங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர்.
நூற்-றுக்-க-ணக்-கா-னோர் வீடு-களை இழந்து தவித்-த-னர்.

