புதுடெல்லி: பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணம் மேற்கொண்டவர்களிடம் இருந்து ரூ.1,377 கோடி அபராதம் வசூ லித்துள்ளது இந்திய ரயில்வே துறை.கடந்த 3 ஆண்டுகளில் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக அத்துறை குறிப்பிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அபராத வசூல் குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ரயில்வே துறை பல்வேறு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.
"2016-2017க்கான நிதியாண்டில், ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.405 கோடியே 30 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
"2017-2018ஆம் நிதியாண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும் 2018-2019ஆம் நிதியாண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டது," என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை, பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணம் செய்த 89 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்து பிடி
படுபவர்களிடம் பயணச்சீட்டுக்கான கட்டணத்துடன் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அபராதத்தைச் செலுத்த மறுத்தாலோ அல்லது அபராதம் செலுத்த பணம் இல்லாவிட்டாலோ அத்தகைய நபர்கள் ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவது நடைமுறையாக உள்ளது.
இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் ரயில்வே சட்டம் வழி வகுக்கிறது.

