பல்வேறு மாநிலங்களில் நீடிக்கும் கனமழை

பல்வேறு மாநிலங்களில் நீடிக்கும் கனமழை

1 mins read
115ec15f-7eec-40c6-aa6b-2be954227ce2
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள அஜ்மீர் நகரில் சாலைகளில் வெள்ளம்போல் மழை நீர் தேங்கி உள்ளது. அங்கு பள்ளியில் இருந்து மிதி வண்டியில் வீடு திரும்பிய ஒரு மாணவன் வெள்ள நீரில் விழுந்து தடுமாறிய காட்சி. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை முதல் மத்தியப் பிரதேசம், ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவுகள், கோவா, தென் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பஞ்சாப்பில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பக்ரா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அணை கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளும் விளைநிலங்களும் மூழ்கி உள்ளன.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 முதல் 9 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது.