இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'ஃபிட் இந்தியா' எனப்படும் சுகாதார இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு முதன்முறையாக 2014ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தேசிய அளவில் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்
படுத்தி வருகிறது. 'தூாய்மை இந்தியா', 'யோகா தினம்', 'டிஜிட்டல் இந்தியா', 'ஸ்கில் இந்தியா' என பல திட்டங்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு செயல்
படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் உடல் வலிமையைப் பேணும் வகையில் 'ஃபிட் இந்தியா' என்ற இயக்கம் அறிமுகம் கண்டுள்ளது. தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் சிறப்பு விழா நடைபெற்றது.
ஒவ்வொருவரும் உடல் உறுதியை வளர்த்துக்கொள்ளவும் உடல் நலத்தைப் பேணும் வகையிலும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஒவ்வோர் இந்தியரும் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தில் இணைய வேண்டும் என திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
'நோயற்ற இந்தியா' என்ற முழக்க வரியை முன்வைத்து வரும் இந்திய அரசு, அதற்கு உதவி புரியும் வகையில் 'ஃபிட் இந்தியா' இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
"மின்தூக்கியில் ஏறிச் சென்றால் வெற்றி கிடைக்காது, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லுங்கள்," என இயக்கத்தின் தொடக்க விழாவில் திரு மோடி கூறினார்.
பிரபல விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளான பி.வி.சிந்து, ஹிமாதாஸ், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் 'ஃபிட் இந்தியா' முயற்சிக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

