நிலவில் கனிமவளங்கள் இருப்பது பற்றி சந்திரயான் ஆராயும்

நிலவில் கனிமவளங்கள் இருப்பது பற்றி சந்திரயான் ஆராயும்

1 mins read

பொள்ளாச்சி: பொள்ளாச்சி 'ரோட்டரி கிளப்' சார்பில் சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-2வில் உள்ள 'விக்ரம் ரேடார்' நிலவில் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

"நிலவில் எந்த இடத்தில் இறங்குவது? ஆய்வு செய்வதற்காக செல்லும் பாதை பாதுகாப்பாக உள்ளதா? ஆகியவை குறித்தும் விண்கலம் புகைப்படங்கள் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதிக்குப் பின்னர் நிலவில் கனிமவளங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆராய்ச்சியில் அது ஈடுபடும்," என்றார்.