'பொருளாதார சீர்குலைவுக்கு தவறான பொருளியல் கொள்கையே காரணம்'

'பொருளாதார சீர்குலைவுக்கு தவறான பொருளியல் கொள்கையே காரணம்'

1 mins read

புதுடெல்லி: மத்திய அரசின் தவறான நிதிக்கொள்கை காரணமாக நாட்டின் மொத்த பொருளாதாரமும் சீர் குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பான அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் அனைத்து தொழில் துறைகளும் மந்தநிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பின்மை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நாட்டில் பொருளாதார அவசர நிலை அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

"உண்மையை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட காரணங்களாலேயே இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

"இதற்கும் உலகப் பொருளாதார நிலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை முற்றிலும் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு," என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வராதது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.