தனியார் மயமாகிறது ஏர் இந்தியா

தனியார் மயமாகிறது ஏர் இந்தியா

1 mins read

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்தகவலை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

ந‌‌ஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 95 விழுக்காட்டுப் பங்குகளை விற்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது ந‌‌ஷ்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே கடும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானச் சேவையை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி உள்ளது.