ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து: 12 பேர் பலி

மும்பை: ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணியளவில், இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

துலே மாவட்டம் ஷிர்பூர் பகுதியில் அமைந்துள்ளது இந்த ரசாயன ஆலை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

நேற்று காலை பெரும்பாலான ஊழியர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 9 மணியளவில் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அங்கு 200 லிட்டர் அளவுள்ள பீப்பாயில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில வெடிச் சத்தங்களும் கேட்டுள்ளன.

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆலையில் தீ மளமளவெனப் பரவியதால், கரும்புகை மூண்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான ஊழியர்கள் ஆலையில் இருந்து வெளியேற முடியாத வகையில் உள்ளே சிக்க நேர்ந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியைத் துரித கதியில் மேற்கொண்டனர். இந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!