150 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை

150 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை

1 mins read

புதுடெல்லி: நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக பரபரப்பு நிலவியது.

அரசுத் துறை சார்ந்த அலுவலகங்களில் பெரும் ஊழல் நடப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து நேற்று முன்தினம் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசு துறைகளில் எங்கெல்லாம் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதோ, அந்த இடங்களைக் குறிவைத்து அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதன் மூலம் சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"அரசுத் துறைகளின் சேவையைப் பெறுவதற்கு சாமானியர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதே போல் சிறு வணிகர்களும் ஊழலால் பாதிக்கப்படுகின்றனர்.

"இத்தகைய ஊழல் நடக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து பல்வேறு துறைகளின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.