பிள்ளையார் சதுர்த்தி விழாவைக் காண வருகை தரும் ஜப்பானிய மாணவர்கள்

பிள்ளையார் சதுர்த்தி விழாவைக் காண வருகை தரும் ஜப்பானிய மாணவர்கள்

1 mins read

மும்பை: மும்பையில் நடைபெற உள்ள பிள்ளையார் சதுர்த்தி விழாவைக் காண ஜப்பானில் இருந்து கல்லூரி மாணவர்கள் வருகை தர உள்ளனர். இத்தகவலை தானே நகரில் இயங்கி வரும் தனியார் கல்விக்குழும நிறுவனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "ஜப்பானின் கியோட்டோ சாங்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள 16 மாணவர்கள் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிக்காக வர உள்ளனர். அப்போது அவர்கள் இவ்விழாவையும் காண உள்ளனர்," என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவில் ஆண்டு தோறும் பிள்ளையார் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண் டாடப்படுவது வழக்கம்.