பசு மாடுகளுக்காக கட்டப்படும் தங்கும் விடுதி

பசு மாடுகளுக்காக கட்டப்படும் தங்கும் விடுதி

1 mins read
85e0b3ff-3069-4966-94fa-24b5567af8d0
படம்: ஊடகம் -

புதுடெல்லி: 19 கோடி ரூபாய் செலவில் பசு மாடுகளுக்கு என தங்கும் விடுதி ஒன்றை அமைக்க உள்ளது ஹரியானா அரசு.

அம்பாலா மாவட்டத்தில் உள்ள உக்ரா கிராமத்தில் இந்த தங்கும் விடுதி அமைக்கப்படும் என அக்கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவி ஹரிந்திரா கவுர் தெரிவித்துள்ளார்.

பசுக்களுக்காக இக்கிராம மக்கள் சுமார் 19 ஏக்கர் நிலத்தை கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்துக்குச் சென்றிருந்த போது அங்கு பசு மாடுகளை பராமரிக்கும் முறை தம்மைக் கவர்ந்ததாகவும், அதையடுத்தே இவ்வாறு விடுதி அமைக்க திட்டமிட்டதாகவும் ஹரிந்திரா கவுர் கூறுகிறார்.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில அரசு, மானியத் தொகை அளிக்க முன்வந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 19 ஏக்கர் நிலத்துக்கு ரூ.92 லட்சம் செலவில் மதில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குச் சொந்தமான பசுமாடுகள் கட்டணமின்றி இலவசமாக பராமரிக்கப்படும்.

மேலும் காளை மாடுகளும் தங்கவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.