புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை மனு அளித்துள்ளது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாய் சென்றிருந்தபோது சசி தரூருக்கும் அவரது மனைவி சுனந்தாவுக்கும் இடையே சண்டை மூண்டதாகவும், அப்போது சசி தரூரை அவரது மனைவி தாக்கியதாகவும் முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர்களுடன் தங்கியிருந்த பணியாளரிடம் டெல்லி போலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தரார் தொடர்பாக சசி தரூருக்கும் அவர் மனைவிக்கும் இடையே மோதல் நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், சுனந்தா மரணமடைந்த தினத்தன்று வேறு ஒரு பெண்ணின் பெயரும் சண்டையில் அடிபட்டது என்று டெல்லி போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

