இறந்ததாகக் கூறிய மாணவனுக்கு விடுப்பு அளித்த பள்ளி

இறந்ததாகக் கூறிய மாணவனுக்கு விடுப்பு அளித்த பள்ளி

1 mins read

கான்பூர்: நான் இறந்து விட்டேன் எனக்கு விடுப்பு தாருங்கள் என்று எட்டாம் வகுப்பு மாணவர் கொடுத்த விடுப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பள்ளியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம், கான்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விடுமுறை வேண்டி பள்ளி முதல்வரிடம் விடுப்பு விண்ணப்பத்தை வழங்கியுள்ளார்.

அதில் நான் இறந்துவிட்டதால் தயவு கூர்ந்து விடுப்பு அளியுங்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், உண்மையில் இந்த மாணவரின் பாட்டி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவர் அரை நாள் விடுமுறை பெற லீவ் லட்டரை அளித்துள்ளார். கவனக்குறைவால் பாட்டி இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக, ''நான் இறந்துவிட்டேன்'' என்று எழுதியிருக்கிறார்.

இந்தப் பிழையை கவனிக்காத பள்ளி முதல்வர், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மாணவனுக்கு விடுப்பை அளித்துள்ளார். இந்த சம்பவம் பள்ளி வட்டாரத்தில் கசிந்து புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.