தூத்துக்குடி துப்பாக்கி சூடு; ஆதாரங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; ஆதாரங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்

2 mins read
0c5800df-7213-4f0c-8bba-8d0edd22bb56
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த ஆண்டு பொதுமக்கள் மீது போலிசார் மேற்கொண்ட துப்பாக்கி் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் அதிர்ச்சி அலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் சிபிஐ ஆதாரங்களை சேகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலிசார் நடத்திய துப்பாக்கி் சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். போலிசார் மற்றும் பொது மக்கள் பலரும் இதில் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை சிபிஐ சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலிஸ் அதிகாரி ரவி துப்பாக்கி் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

இதையடுத்து சிபிஐ சூப்பிரி டென்டண்ட் சரவணன் மற்றும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் துப்பாக்கி் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், போலிஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் காெணாளி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர். அதன்படி கூடுதல் காெணாளி ஆதாரங்களை கேட்டு மாவட்ட நிர்வாகத்தை சிபிஐ அதிகாரிகள் அணுகியுள்ளனர்.

அதன்பேரில், துப்பாக்கி் சூடு நடந்தபோது, தொலைக்காட்சி களில் ஒளிபரப்பான காணொளி பதிவுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேற் கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்த விவரங்களை நீதி மன்றத்தில் தெரிவிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை அறி வுறுத்தியுள்ளது. அதன்பேரில் வருகிற 16ஆம் தேதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.