புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைக் காத நிலையில் சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தை மேலும் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை என்றும் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சிபிஐ வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டுள்ளது. மேலும் சிதம்பரத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை சிதம்பரத்தை மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தர விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

