கனமழையால் மும்பை பள்ளிகள் மூடல்

கனமழையால் மும்பை பள்ளிகள் மூடல்

1 mins read
8f230f6b-569c-4bcd-b9f3-3371e67905f2
-

மும்பை நகரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் நிரம்பி வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பள்ளி விடுமுறையை அறிவித்தனர்.

இதன் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை நிலையை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தியது.

இருந்தபோதும் சத்திரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிப்படையவில்லை என்றும் அங்கு சின்னஞ்சிறு தாமதங்களே ஏற்பட்டுள்ளன என்றும் அங்குள்ள ஓர் அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.