மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் தங்க இறக்குமதி சரிவு

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் தங்க இறக்குமதி சரிவு

1 mins read
65014693-4be8-4101-80f7-327be707ea1c
-

இந்தியாவின் தங்க இறக்குமதி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 73 விழுக்காடு குறைந்தது.

அனைத்துலக தங்க விலையின் அதிகரிப்பால் ஏற்படும் அனுகூலங்களை இந்தியாவின் குறைவான இறக்குமதி மட்டுப்படுத்தலாம். ஆயினும் இது, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைத் தணிக்கவும் ரூபாய் நாணயத்தின் மதிப்பைக் கட்டிக்காக்கவும் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆகஸ்ட் மாதத்தில் 30 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னர் தங்க இறக்குமதி 111.47 டன் அளவில் இருந்தது. பண மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் தங்க இறக்குமதி 62 விழுக்காடு குறைந்து 1.37 பில்லியன் டாலராக உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.