ரூ.2,780 கோடி முதலீடு

ரூ.2,780 கோடி முதலீடு

2 mins read
5693f7ac-b437-4bb6-99e4-56d3488150fc
முதல்வர் கே. பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்கள் கையெழுத்திட்டன. படம்: இந்திய ஊடகம் -

நியூயார்க்: தமிழகத்தில் ரூ.2,780 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்றார்.

கடந்த 28ஆம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் அவர் பிரிட்டனுக்குச் சென்றார்.

அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் மேம்பாடு, லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் அங்குள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.

அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றியும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகக் கூட்டரங்கில் பேசியதுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

பிரிட்டனில் உள்ள சஃபோக் நகரில் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ கத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும் தடையற்ற மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளதாகவும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக தமிழ்நாட்டில் 8,000 ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அப்போது, ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக 16 நிறு வனங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் புரிந் துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.