சென்னை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி இன்று நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் 165 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 165 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள், 3 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
377 பேருக்கு நல்லாசிரியர் விருது
1 mins read

