கர்நாடகா: முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது

கர்நாடகா: முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது

1 mins read

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடகா முழுவதும் பேருந்து எரிப்பு, வாகனங்கள் மீது கல் வீச்சு எனப் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

முன்னதாக, கறுப்புப் பண மோசடி வழக்கின் பேரில், அமலாக்கத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் சிவக்குமார்.

அண்மையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழக்கூடாது என கடும் முயற்சிகளை மேற்கொண்டார் சிவக்குமார்.

இதனால் மத்திய அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரைக் கைது செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.