தாய், மகளிடம் சிக்கிய சங்கிலி திருடன்

தாய், மகளிடம் சிக்கிய சங்கிலி திருடன்

1 mins read

புதுடெல்லி: நாடு முழுவதும் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் தாயும் மகளுமாகச் சேர்ந்து ஒரு திருடனைப் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் நங்லோய் பகுதியில் நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த அத்திருடன் தாய் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றான். சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண்மணி, அவனைப் பிடிக்க முற்பட்டார். இதற்குள் அவனது வாகனம் ஒரு பக்கமாக சரியவே, அவன் கீழே விழுந்தான். இதையடுத்து தாயும் மகளும் அவனை அடித்து, பொது மக்கள் துணையுடன் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.