கலிஃபோர்னியாவின் சாண்டா க்ரூஸ் தீவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் மாண்ட 34 பேரில் இருவர் இந்தியத் தம்பதியர் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
நாக்பூரைச் சேர்ந்த பிரபல குழந்தை மருத்துவர் சதீஷ் டியோபூஜாரியின் மகளும் மருமகனும் முக்குளிப்பாளர்கள் சிலருடன் அந்தப் படகில் இருந்தபோது அது துரதிஷ்டவசமாகத் தீப்பிடித்தாக அந்தத் தம்பதியரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
இந்தியத் தம்பதியரில் மனைவி பல் மருத்துவராகவும் கணவர் நிதி நிறுவனத்தில் பணியாளராகவும் இருந்தனர்.
திடீரென படகு எப்படி தீப்பிடித்தது என்பதை போலிசார் தற்போது விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் மட்டும் உயிர் தப்பியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

