'பாஜகவுக்கு செல்ல மறுத்ததால் டி.கே.சிவகுமார் கைது'

'பாஜகவுக்கு செல்ல மறுத்ததால் டி.கே.சிவகுமார் கைது'

1 mins read
b45127d7-a8b3-4a53-9c0e-bbd50492b7cd
-

மைசூரு: காங்கிரசின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா.

"டி.கே.சிவக்குமாரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சித் தலைவர்களின் வழக்குகளை ரத்து செய்கிறோம் என்பது உள்பட பல்வேறு ஆசைகளைக் காட்டியுள்ளனர். ஆனால் அவர் பாஜகவுக்குச் செல்ல விரும்பவில்லை. இதுகுறித்து என்னிடம் அவர் தெரிவித்தார். அவர் பாஜகவுக்குச் செல்ல மறுத்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

"குறிப்பாக குஜராத் காங்கிரஸ் எம்பிக்கள் பாஜகவுக்குச் செல்வதை டி.கே.சிவகுமார் தடுத்து பாதுகாத்தார். இதனால் தான் பாஜக அரசு தற்போது அவர் மீது பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு எதுவும் ஆகாது, அவர் வெற்றியுடன் திரும்புவார்," என்றார் சித்தராமையா.