மலாய் மொழியில் மோடியின் டுவிட்டர் பதிவு

மலாய் மொழியில் மோடியின் டுவிட்டர் பதிவு

1 mins read
caae41d6-b9bf-425e-9356-6d028f7ea6f0
-

மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுடனான தமது சந்திப்பைப் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

"மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீருடன் மிக நல்லபடியான சந்திப்பில் ஈடுபட்டிருந்தேன். எங்களது நாடுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி நாங்கள் பேசி, ஒத்துழைப்பை மேலும் பன்முகப்படுத்துவது பற்றி கலந்துரையாடினோம்," என்று அவர் தெரிவித்தார்.

மற்ற நாட்டுத் தலைவர்களைக் காணச் சென்றபோது அவர்களது தேசிய மொழியில் டுவிட்டர் பதிவுகளை மோடி பல முறை வெளியிட்டிருக்கிறார். ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்த பிறகு ஜப்பானிய மொழியிலும் விளாடிமீர் புட்டினைச் சந்தித்தபிறகு ரஷ்ய மொழியிலும் திரு மோடி 'டுவீட்' செய்திருக்கிறார்.

திரு மோடியும் டாக்டர் மகாதீரும் ரஷ்யாவின் விளாடிவொஸ்டோக் நகரில் நடைபெறும் கிழக்கத்திய பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர்.