நிலவில் தரையிறங்கும் தறுவாயில் இந்திய விண்கலம்

நிலவில் தரையிறங்கும் தறுவாயில் இந்திய விண்கலம்

1 mins read
0507c644-824d-475d-a5a6-bfd0e254ea5e
-

இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் இன்றிரவு நிலவில் தரையிறங்க முயலும்.

இது வெற்றிகரமாக நிறைவேறினால் இந்தியா நிலவில் தரையிறங்கப்போகும் நான்காவது நாடாக இருக்கப்போகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கெனவே தங்களது விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள கால்பதியா இடத்தில் இந்தியா தனது விண்கலத்தை வெற்றிகரமாக இறக்க முடியுமா என்பதை அனைத்துலக விஞ்ஞானிகள் உற்றுப்பார்க்கின்றனர். தென் துருவத்தில் உறைந்துபோன நீர் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால் இந்தப் பயணம் விஞ்ஞானிகளுக்கு சுவாரஸ்யமானதாக உள்ளது.

சந்திரயான்-2 திட்டத்திற்கான செலவு , மற்ற விண்வெளித் திட்டங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில் நடத்தபட்டுள்ளது. இதற்காகச் செலவு செய்யப்பட்ட 150 மில்லியன் டாலர், விண்வெளியைப் பற்றிய 'இன்டர்ஸ்டெல்லா' ஹாலிவுட் படத்திற்கான செலவைக் காட்டிலும் குறைவு.