இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திகார் சிறைச்சாலையில் இதுவரை ஓர் இரவு தங்கியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கின் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை இரண்டு வார தடுப்புக்காவலில் வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்தது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான அவருக்குச் சிறைச்சாலையில் எந்தச் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
மற்ற கைதிகளைப் போல் திரு சிதம்பரம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தொலைக்காட்சி பார்க்கலாம். அத்துடன் அவர் சிறைச்சாலை நூலகத்தைப் பயன்படுத்தலாம்.
ஆயினும், இந்தியாவின் இரண்டாவது ஆக உயர்வான பாதுகாப்பு நிலையான 'ஸி' பாதுகாப்பு நிலையில் திரு சிதம்பரம் இருப்பதால் அவர் தங்கியுள்ள சிற்றறைக்கு பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளது.

