தைவானுக்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பிய அமைச்சர்கள்

தைவானுக்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பிய அமைச்சர்கள்

1 mins read
4e987112-2bd5-4191-adb5-e877f55ce905
தைவான் நாட்டில் நிறுவப்பட உள்ள இரு திருவள்ளுவர் சிலைகளை கப்பல் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை எம்ஜிஆர்-ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். படம்: ஊடகம் -

சென்னை: விஜிபி உலக தமிழ்ச்சங்க நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலைகளை அனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த சங்கம் கடந்த 25 ஆண்டு களாக பல்வேறு நாடுகளிலும் 50 திரு வள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளது. அத்துடன் 16 திருக்குறள் மாநாடு களையும் நடத்தியுள்ளது.

அவ்வகையில் அடுத்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தைவான் நாட்டின் ஹூவாலியன் மலையில் உள்ள பூங்காவில் இரு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் யுசி தலைமையில் நடந்து வருகிறது.

இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறுகையில், "திருவள்ளுவர் சிலைகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கு வதன்மூலம் திருக்குறளின் அருமை, பெருமை உயர்ந்தோங்கும்," என்றார்.இதேபோல அடுத்த மாதம் 20ஆம் தேதி தைவான் தலைநகர் தைப்பேயில் திருக்குறள் மாநாடும் நடைபெறுகிறது.