சென்னை: ரயில்வே துறையின் பணிகளுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிர் அணியின் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் திமுகவினர் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே துறை அறிவித்து உள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு சாதகமான இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

