பள்ளிவாசலைப் பராமரித்து வரும் இந்துக்கள்

பள்ளிவாசலைப் பராமரித்து வரும் இந்துக்கள்

1 mins read
d7979be8-204b-48b7-aee9-699ff87403ad
-

பீகார்: தங்களது ஊரில் முஸ்லிம்கள் எவரும் வசிக்காத நிலையிலும் அங்குள்ள 200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலைப் பராமரித்து, சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் உள்ள மாதி கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள். முன்பு ,அங்கு முஸ்லிம்கள் வசித்து வந்தனர் என்றும் காலப் போக்கில் அனைவரும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் கூறிய அந்த கிராமவாசிகளில் ஒருவரான ஹன்ஸ் ராஜ், அந்தச் சமயத் தலத்தில் நாள்தோறும் ஐந்து முறை தாங்கள் தொழுகை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.